லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனாலேயே இப்போது ஒட்டுமொத்த படக்குழுவும் அங்கேயே டேரா போட்டிருக்கிறார்கள். ஆனால் இதில் தான் தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக வெளியிடங்களுக்கு சென்றாலே சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு விடும்.
அதுவும் காஷ்மீர் போன்ற குளிர் பிரதேசங்களில் சிலரால் மட்டுமே தாக்குபிடிக்க முடியும். ஆனால் லியோ படத்திற்காக தற்போது ஒரு பெரிய பட்டாளமே அங்கு தங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் ஜாலியாக பிக்னிக் செல்வது போல் சென்ற பட குழு இப்போது எதற்கு காஷ்மீர் வந்தோம் என்ற ரீதியில் திக்கி திணறிக் கொண்டிருக்கிறார்களாம்.
ஏனென்றால் தற்போது காஷ்மீரில் குளிர் மைனஸ் டிகிரியில் இருக்கிறது. அதன் காரணமாகவே அங்கு இருக்கும் பலருக்கு காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அதிகாலை நேரத்தில் எழுந்திருக்க கூட முடியாமல் அனைவரும் சுருண்டு கிடக்கிறார்களாம். அந்த அளவுக்கு குளிரின் தாக்கம் அவர்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.
இப்படி அனைவரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் ஹீரோ விஜய் மட்டும் தில்லாக அதிகாலையிலேயே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விடுகிறாராம். அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாகவே வந்து காத்துக் கொண்டிருக்கிறாராம். இதைப் பார்த்து இயக்குனர் லோகேஷ் தான் வெட வெடத்து போயிருக்கிறார்.
ஆனால் விஜய் யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம் அவர்கள் வருகிற நேரத்திற்கு வர வேண்டும் என்று கூலாக கூறி இருக்கிறார். இருந்தாலும் ஹீரோ வந்து காத்துக் கொண்டிருக்கிறாரே என்று டெக்னீசியன்கள் அனைவரும் கஷ்டப்பட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விடுகிறார்களாம். அதனால் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது.
இருப்பினும் லோகேஷ் கனகராஜ் சிறிது நாட்கள் சென்னைக்கு வந்துவிட்டு திரும்பவும் வந்து ஷூட்டிங் செய்யலாமா என்ற யோசனையிலும் இருக்கிறார். அந்த அளவுக்கு காஷ்மீர் குளிர் அனைவரையும் படாத பாடு படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த உறைய வைக்கும் பனியிலும் விஜய் கொடுக்கும் அலப்பறை தான் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.
Also read: லியோ மொத்தப் படக் குழுவும் பேக்கப்.. ஒன் மேன் ஆர்மியாக மாஸ் காட்டும் விஜய்