திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஏ ஆர் முருகதாஸை ஏமாற்றிய தமிழ் நடிகர்கள்.. மீண்டும் தூக்கி போட்டு ஹிந்திக்கு போய்விட்டார்.!

நடிகர் அஜித்குமாரின் தீனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக கால் தடம் பதித்தவர் தான் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். இந்த படம் நடிகர் அஜித்திற்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தமிழ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வெற்றி காண்பதற்கு முருகதாஸ்தான் முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம்.

அதேபோன்று குறிப்பிட்ட காலகட்டத்தில் ஊழலை எதிர்த்து பல படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தபோது இயக்குனர் முருகதாஸ் கேப்டன் விஜயகாந்தை வைத்து ரமணா என்னும் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. மேலும் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

Also Read:சரண்டர் ஆன வெங்கட் பிரபு.. விஜய் வந்ததும் மாஸ் ஹீரோவை கழட்டிவிட்ட பரிதாபம்

இப்படி தமிழ் சினிமாவில் முக்கிய திரைப்படங்களை கொடுத்த முருகதாசுக்கு தமிழில் தற்போது படங்களே இல்லை. கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தர்பார் படத்தை இயக்கினார். இந்தப் படத்தை முருகதாஸ் மட்டுமில்லை ரஜினிகாந்த் மலை போல நம்பி இருந்தார். படம் பயங்கர பிரம்மாண்டமாக எடுக்கப்படும் ஏனோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனது. இதனால் இந்த படம் தோல்வியும் அடைந்தது.

தர்பார் திரைப்பட தோல்வியை தொடர்ந்து முருகதாஸ் அப்படியே ரூட்டை மாற்றி தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார். இருந்தாலும் அவருக்கு தமிழில் மீண்டும் தளபதி விஜய் வைத்து இயக்குவதற்கு விருப்பம் இருந்தது. இவர்கள் இருவரது கூட்டணியில் வெளியான துப்பாக்கி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Also Read:விஜய் படம் என்ற தெனாவெட்டில் இருந்த வெங்கட் பிரபு.. கஸ்டடியால் ஒரே அடியாய் கவிழ்த்து விட்ட AGS

விஜய்யிடம் எப்படியாவது கதை சொல்லி விட வேண்டும் என முருகதாஸ் பலமுறை முயற்சித்தார். ஆனால் துப்பாக்கிப் போன்று ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த கதையைக் கூட கேட்க விரும்பாமல் தவிர்த்து விட்டார். அதேபோல் நடிகர் சிம்புவுடன் படம் பண்ணுவதற்கும் முருகதாஸ் கதை சொல்ல விருப்பம் தெரிவித்தார் ஆனால் சிம்புவும் அதை கண்டுகொள்ளவில்லை.

இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் முருகதாஸ் இடம் கதை கேட்டுவிட்டு இருவரும் கண்டிப்பாக இணைந்து சொல்லி இருக்கிறார். ஆனால் அதன் பிறகு வேறு ஒரு படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இதனால் முருகதாஸ் பயங்கர கடுப்பில் இருக்கிறார். தமிழ் சினிமாவே வேண்டாம் என்று ஹிந்தி படம் பக்கம் சென்றுவிட்டார். நடிகர் சல்மான்கானின் மிகப்பெரிய ஹிட் படத்தின் இரண்டாவது பாட்டை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது.

Also Read:விஜய், அஜித் சினிமாவை விட்டுப் போகணும்னு ஆசைப்படும் 5 நடிகர்கள்.. ஒரே ஒரு வாய்ப்புக்காக ஏங்கும் தங்கலான்

Trending News